Breaking News

வனப்பகுதி அருகே உள்ள வீடுகளில் வனத்துறை அதிரடி சோதனை திட்டம்

வனப்பகுதி அருகே உள்ள வீடுகளில் வனத்துறை அதிரடி சோதனை திட்டம்

பொள்ளாச்சி, பிப்.16
 
 வனக்குற்றங்களை தடுக்க ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வனப்பகுதி குடியிருப்புகள் மற்றும் வனத்தையொட்டிய குடியிருப்புகளில் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 
 

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி ஆகயி ஆறு வனச்சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான பறவைகள் என பல்லுயிரிகள் வாழ்ந்துவருகின்றன. 

 ஆனைமலை  புலிகள் காப்பகத்தில் அவ்வப்போது சில வனக்குற்றங்களும் நடந்துவருகின்றன. இந்த வனக்குற்றங்களை தடுக்க தற்போது வனத்துறை ஒரு அதரடி திட்டத்தை துவக்கவுள்ளது. இதற்காக உதவி வனப்பாதுகாவலர் அந்தஸ்திலான புதிய வனக்குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இந்த குழுவினர் வனப்பகுதியை ஒட்டிய வீடுகள், வனத்திற்குள் இருக்கும் வீடுகளில் சோதனை நடத்தவுள்ளனர்.
 
  தொடர்ந்து தம்மம்பதி உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்தவர்கள் வனக்குற்றங்களில் ஈடுபட்டுவருவது தொடர்கிறது என வனத்துறையினர் தெரிவித்தனர். ஏற்கனவே ஓராண்டுக்கு முன்பு தம்மம்பதியை சேர்ந்த ஒருவர் சிறுத்தை வேட்டையாடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால், வனத்திற்குள்ளும், வனத்தை ஒட்டி வெளியே உள்ள வெளியே வசிக்கும் பகுதிகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் வனத்துறையினர் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

பொதுவாக மலைவாழ் மக்கள் வனத்திற்கும், வன உயிரினங்களுக்கும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால், ஒருசிலர் மலைவாழ் மக்கள் என்ற போர்வையில் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த மலைவாழ் மக்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுகிறது. 
 மேலும், வனப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் வனத்துறையின் அனுமதியின்றி சென்றுவருபவர்களையும் கைது செய்ய வனத்துறை திட்டமிட்டுள்ளது.

----










 

No comments