Breaking News

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தோல்வி ஜுரம்- பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தோல்வி ஜுரம்

பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி 

பொள்ளாச்சி.பிப்.16
 
 

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி ஜூரம் வந்துவிட்டதாக சட்டப்பேரவை துணைத்தலைவரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.
 
பொள்ளாச்சி நகரப்பகுதியில் நடைபெற்றுவரும் சாலை விரிவாக்க பணிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் கிருஷ்ணகுமார், சார்-ஆட்சியர் வைத்திநாதன், நகராட்சி ஆணையர் காந்திராஜ்,வட்டாட்சியர் தணிகைவேல் உட்பட பலர் இருந்தனர்.

 பின்னர் செய்தியாளர்களிடம் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் அளித்த பேட்டி....
 
 அதிமுக கூட்டணி குறித்து அதிமுக மேல்மட்ட தலைவர்கள் நல்ல முறையில் பேசி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் விரும்பிய கூட்டணி அமையும். அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை.
 
வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும், இந்த கூட்டணி வெற்றிபெரும்.
 
  திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லி செய்கிற இடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவும், ஆற்றலும் இருப்பதால் மக்களுக்கான திட்டங்களை அறிவித்து வருகிறார். திமுக தேர்தலில் தோல்வியடைந்துவிடுமோ  என்ற காய்ச்சலும் நடுக்கமும் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது.எடப்பாடி பழனிச்சாமிக்கு வெற்றிமுகமும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தோல்விமுகம் என்றார். 

 காந்திசிலை ஆய்வு...
பொள்ளாச்சி காந்தி சிலைக்கு பாதுகாப்புக்காக இரும்பு கம்பிகளால் கூண்டு அமைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் செவ்வாய்க்கிழமை காந்திசிலை பகுதியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பார்வையிட்டார். தொழில் வர்த்தக சபைத்தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், சார்-ஆட்சியர் வைத்திநாதன், டிஎஸ்பி சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். அதற்கு பிறகு காந்திசிலை முன்பகுதியை மறைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கம்பிகளை அகற்றமுடிவு செய்யப்பட்டது.

----
 

 

No comments