பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை வைத்து கொமதேக சார்பில் கையெழுத்து இயக்கம் துவக்கம்
பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை வைத்து கொமதேக சார்பில் கையெழுத்து இயக்கம் துவக்கம்
பொள்ளாச்சி. பிப். 18. பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை வைத்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அரசின் கவனத்திற்கு செல்லும் வகையில் இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
பொள்ளாச்சி கோட்டத்தின் தாலுகாவாக இருந்த திருப்பூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் பல்வேறு சிறிய பகுதிகள் எல்லாம மாவட்டமாக மாற்றப்பட்டு விட்டது.
ஆனால் பொள்ளாச்சி மக்கள் தொகை அடிப்படையிலும் பரப்பளவு அடிப்படையிலும் மாவட்டமாக தகுதி இருந்தும் பல்வேறு காரணங்களுக்காக மாவட்டமாக மாற்றப்படாமல் இருந்து வருகிறது.
பொள்ளாச்சிப் பகுதியில் வியாபாரிகள் சங்கம், தொழில் வர்த்தக சபை மற்றும் பொதுமக்கள் சார்பில் பொள்ளாச்சியை மாவட்டமாக வேண்டி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பொள்ளாச்சியை மாவட்டமாக வேண்டி கோரிக்கை வைத்து இன்று கையெழுத்து இயக்கம் பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கப்பட்டது. கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் முதல் கையெழுத்திட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கையெழுத்திட்டனர்.
பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை வைத்து கொமதேக சார்பில் கையெழுத்து இயக்கம் துவக்கம்
Reviewed by Cheran Express
on
February 17, 2021
Rating: 5
Reviewed by Cheran Express
on
February 17, 2021
Rating: 5
No comments