Breaking News

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

பொள்ளாச்சி, பிப்.6
 பொள்ளாச்சி அருகே விவசாய பணியின்போது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
 

 பொள்ளாச்சி அடுத்த குள்ளக்காபாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயி. இவர் வெள்ளிக்கிழமையன்று தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். 
 
கடப்பாறையால் குழிதோண்டி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கீழே மின் ஒயர் செல்வதை பார்க்காமல் கடப்பாறையால் குத்தியுள்ளார். 
 
இதில் கடப்பாறை வழியாக மின்சாரம் பாய்ந்து  பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். பொள்ளாச்சி தாலூக்கா போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

--

 

No comments