இந்துமக்கள் கட்சியினர் 16 பேர் கைது
இந்துமக்கள் கட்சியினர் 16 பேர் கைது
பொள்ளாச்சி, பிப்.6
தாராபுரத்தில்
இந்துமக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் காரை வழிமறித்த இஸ்லாமிய
அமைப்புகளை கண்டித்து ஆனைமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது
செய்யப்பட்டனர்.
சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன்சம்பத் காரை வழிமறித்து இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து சனிக்கிழமை ஆனைமலை முக்கோணம் பகுதியில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இந்துமக்கள் கட்சி கோவை தெற்கு
மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் செல்வா, ரவி, சந்தோஷ் உட்பட
16 பேர் கைது செய்யப்பட்டனர்.
---

No comments