பொள்ளாச்சி-பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
பொள்ளாச்சி-பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
பொள்ளாச்சி. பிப். 15.
பொள்ளாச்சி உடுமலை சாலையில் கெடிமேடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை - இலுப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்(25). இவர் புதுக்கோட்டையில் வேளாண் பொறியியல் துறையில் ஒப்பந்த ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் தனது நண்பர் பெருமாள் (21) என்பவருடன் பல்சர் பைக்கில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
மீண்டும் நேற்று இரவு கொடைக்கானலில் இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக உடுமலைப்பேட்டை வழியாக வந்துள்ளனர்.
அப்போது, பொள்ளாச்சியில் இருந்து களியக்காவிளைக்கு டிராவல்ஸ் பேருந்து ஒன்று உடுமலை சாலையில் சென்றுள்ளது.
பொள்ளாச்சி
உடுமலை சாலையில் கெடிமேடு பகுதி அருகே சென்ற போது எதிரே வந்த இருசக்கர
வாகனத்தின் மீது ட்ராவல்ஸ் பேருந்து மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட
இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று
இரவு 11. 30 மணியளவில் விபத்து நடைபெற்றுள்ளது. அருகில் இருந்த பொதுமக்கள்
சென்று பார்த்தபோது இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரின் உடலும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கோமங்கலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையை சேர்ந்த டிராவல்ஸ் பேருந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments