Breaking News

தேர்தலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாஜக தொண்டர்கள் பாடுபடவேண்டும்-பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை பேச்சு

தேர்தலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக  பாஜக தொண்டர்கள் பாடுபடவேண்டும்

பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை பேச்சு

பொள்ளாச்சி, பிப்.1
 

பாஜகவின் வளர்ச்சிக்காக பாஜக தொண்டர்கள் பாடுபடுவதுடன் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாடுபடவேண்டும் என பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.< /b>

 பாஜக சார்பு அணிகளின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை பொள்ளாச்சி முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
 மாநில துணைத்தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 
 

மாநில பொதுச்செ
யலாளர் ஜி.கே. செல்வக்குமார், மாவட்டத்தலைவர் வசந்தராஜன், மாவட்ட பார்வையாளர் மோகன் மந்தராச்சலம், மாநில விவசாய அணி துணைத்தலைவர் பாபா ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம்,  மாவட்ட நிர்வாகி  தனபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை பேசியது...
 
மத்திய அரசின் திட்டங்களை பாஜக தொண்டர்கள்  பொதுமக்களிடம் கொண்டுசெல்லவேண்டும். பொதுமக்களை சந்தித்து மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் திட்டங்கள் குறித்து விளக்கவேண்டும். ஜல் சக்தி திட்டத்தின் மூலம் 2023 ஜூலை மாதத்திற்குள் அனைத்து  வீடுகளுக்கும் குடிநீர் வசதி கிடைக்கும். 
 
2022 டிசம்பருக்குள் அனைவருக்கு வீடு கிடைக்கும். 2024ம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். மத்திய அரசு சார்பில்191 திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறவேண்டும். 
 
உண்மையான பாஜக தொண்டர்கள் கட்சியின் வளர்சிக்கு மட்டுமில்லாமல் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாடுபடவேண்டும் என்றார்.


 

No comments