Breaking News

கிளிகள் விற்பனை செய்த இருவர் கைது

கிளிகள் விற்பனை செய்த இருவர் கைது 

பொள்ளாச்சி, பிப்.1 ப

ொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் கிளிகள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டுபேரை போலீஸார் கைது செய்தனர்.  

பொள்ளாச்சி பகுதியில் மலைவாழ் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய வன குற்ற தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. 


இதையடுத்து, திங்கள்கிழமை பொள்ளாச்சி பேருந்து நிலையப்பகுதியில் மத்திய வன குற்ற தடுப்பு பிரிவினருடன், பொள்ளாச்சி கோட்ட வனத்துறையினரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கிளிகள் விற்பனை செய்வது தெரியவந்தது. 

 இதையடுத்து, கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அணிஸ்மோகன்(25), கோவை நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார்(25) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 11 மலைவாழ் கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

கைது செய்யப்பட்டவர்கள் இணக்க கட்டணம் செலுத்த சம்மதித்ததால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் இருவருக்கும் சேர்த்து ரூ.50 ஆயிரம் இணக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ----

No comments