Breaking News

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பட்ஜெட் உள்ளது-பாஜக தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன்

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பட்ஜெட் உள்ளது

பாஜக தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன்

பொள்ளாச்சி, பிப்.2
 
 நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்து வகையில் மத்திய பட்ஜெட் உள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். 


பொள்ளாச்சியில் கயிறுவாரிய கூட்டத்திற்கும், பாஜக அலுவலக திறப்பு விழாவிற்கும் வானதி சீனிவாசன் செவ்வாய்க்கிழமை வருகை புரிந்தார்.
 அதற்கு பிறகு பத்திரிக்கையாளர்களிடம் வானதி சீனிவாசன் தெரிவித்ததாவது....
 
கரோனா கால கட்டத்தில் வெளியிடுப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அனைத்து துறைகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. சுய சார்பு பாரதம் என்ற நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்களுக்கு பட்ஜெட் உதவிகரமாக இருக்கும். சாலைகளுக்காக அதிக நித ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
டெக்ஸ்டைல்ஸ், லெதர் நிறுவனங்களுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 1 கோடி புதிய சமையல் எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 
நாட்டின் வளர்த்து பொருளாதாரத்தை ஊக்குவித்து உயர்த்தும் வகையில் உள்ளது. இந்த பட்ஜெட்டை குறைகூறும் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு காலத்தில் போடப்பட்ட பட்ஜெட் குறித்து படித்துபார்த்துவிட்டு தற்போதைய பட்ஜெட் குறித்து பேசட்டும்.
 
 தமிழகத்திற்கு மட்டும் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் ராகுல் காந்தியின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதால், தற்போது தமிழகத்திற்குள் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்கிறார். பொள்ளாச்சியை மாவட்டம் ஆக்குவது குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
 
உடன் தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு மாவட்டத்தலைவர் வசந்தராஜன், மாாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்தராச்சலம், நிர்வாகிகள் முத்துராமலிங்கம், துரை, சிவக்குமார், தனபாலகிருஷ்ணன், மணிகண்டகுமார் உட்பட பலர் இருந்தனர்.

---

 

No comments