பொள்ளாச்சி அருகே தென்னைநார் தொழிற்சாலையில் தீவிபத்து - பல லட்சம் மதிப்பிலான நார்கள் சேதம்
பொள்ளாச்சி அருகே தென்னைநார் தொழிற்சாலையில் தீவிபத்து
பல லட்சம் மதிப்பிலான நார்கள் சேதம்
பொள்ளாச்சி, பிப்.4
பொள்ளாச்சி
அடுத்த பொன்னாலம்மன்துறை பகுதியில் தனியார் தென்னநார் தொழிற்சாலையி்ல
ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான தென்னைநார்கள்
எரிந்து சேதமாகியது.
பொள்ளாச்சி அடுத்த பொன்னாலம்மன்துறையில் தனியாருக்கு சொந்தமான தென்னைநார் தொழிற்சாலைகள் இயங்கிவருகிறது. வியாழக்கிழமை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தென்னைநார் கொட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பகுதியில் திடீரென தீ பிடித்து எரியத்துவங்கியது.
பொள்ளாச்சி
தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர்
வருவதற்குள் தீ பரவி பெரும்பாலான தென்னைநார்கள் எரிந்துசேதமானது.
பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர் மட்டும் கிணத்துக்கடவு தீயணைப்பு
துறையினர் வந்து சில மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில்
பல லட்சம் மதிப்பிலான தென்னைநார்கள் எரிந்து சேதமானது.
இதேபோல்,
பொள்ளாச்சி அடுத்த அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில்
வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெரிய சேதம் ஏற்படுவதற்குள் தீ
அணைக்கப்பட்டது.
----

No comments