பொள்ளாச்சி-வேட்டைக்காரன்புதூர் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி
பொள்ளாச்சி-வேட்டைக்காரன்புதூர் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி
பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூரில் செளத் இந்தியன் வங்கி ஏடிஎம்இல் கொள்ளை அடிக்க முயற்சி செய்தபோது தீ பிடித்து எரிந்தது.
பொள்ளாச்சி
அடுத்த வேட்டைக்காரன்புதூர் பகுதியில் செளத் இந்தியன் வங்கி கிளை உள்ளது.
இந்த வங்கியை ஒட்டியே செளத் இந்தியன் வங்கி கிளையின் ஏடிஎம்
செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில்
ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதற்காக வெல்டிங் மெசின் உதவியுடன் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க
முயன்றுள்ளனர். அப்போது,ஏடிஎம் இயந்திரம் தீ பற்றியுள்ளது. இதனால்,
கொள்ளையர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
ஏடிஎம் இயந்திரம் தீ பற்றி எரிவதை
பார்த்த பொதுமக்கள் அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உதவியுடன்
தீயணைப்பான் கொண்டு தீயை அணைத்துள்ளனர். ஆனைமலை போலீஸாருக்கு தகவலர்
தெரிவிக்கப்பட்டதை அடுத்த போலீஸார் வந்து சம்பவ இடத்தில் விசாரணை
நடத்திவருகின்றனர்.
ஏடிஎம் ற்கு வங்கி சார்பில் காவலர்கள் யாரும்
நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஏடிஎம் பல முறை கொள்ளை
முயற்சி நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கை ரேகை நிபுணர்களும்
வந்து சோதனை செய்துள்ளனர்.

No comments