Breaking News

திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்புகளும், கட்டப்பஞ்சாயத்துகளும் அதிகரிக்கும்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேட்டி

 

திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்புகளும், கட்டப்பஞ்சாயத்துகளும் அதிகரிக்கும்

பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேட்டி

பொள்ளாச்சி, பிப்.20

திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்புகளும், கட்டப்பஞ்சாயத்துகளும் அதிகரிக்கும் என சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

 நிகழ்ச்சியில் சனிக்கிழமை பங்கேற்ற சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது.... 

 திமுகவிடம் இருந்துதான் தமிழக பெண்களை பாதுகாக்க வேண்டுமே தவிர, தமிழக மக்களுக்கு அதிமுக ஆட்சியில் எந்த ஆபத்தும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு நல்ல அபிமானம் உள்ளது. கடந்த  திமுக ஆட்சியில் நில அபகரிப்பு மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்த கட்சி திமுக என்ற அதிருப்தி மக்களிடையே உள்ளது. 

 திமுக என்றாலே மக்கள் பயந்து ஓடுகிறார்கள். குறிப்பாக சிறு மற்றும் பெரும் தொழிலதிபர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் அபகரித்து விடுவார்கள் என்றுஅச்சப்படுகிறார்கள் . ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 4 ஆண்டுகளாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சி வழங்கி வருகிறார். மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். 

 ஆனால் மு.க. ஸ்டாலின் குற்ற ஆராய்ச்சி நிபுணராக எப்போதும் அரசு மீது குற்றச்சாட்டுக்களை சொல்லி வருவதால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். முதல்வர் செயல்படுத்தும்  நல்ல  திட்டங்களை எல்லாம் அவர் சொல்லி தான் செய்கிறார் என்று ஸ்டாலின் சொல்வதைப் பார்த்தால் அவருக்கு மனநோய் ஏற்பட்டு விட்டதோ என்று மக்கள் நினைக்கிறார்கள். 

 இதனால், அவர் மீது மக்கள் நெருப்பாகி விட்டார்கள். ஸ்டாலின் திட்டங்கள் சொல்லி நிறைவேற்ற வேண்டிய நிலையில் முதல்வர் இல்லை. எடப்பாடியார் யாருடைய  பதவியையும் பறித்துக் கொண்டு  வரவில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் கருணாநிதி மகன் என்ற தகுதியில் தான் தமிழகத்தில் அரசியல் செய்கிறார் என்றார்.

----

No comments