பொள்ளாச்சி அருகே கதவை உடைத்து ரூ.3 லட்சம், வைர நகைகள் திருட்டு
பொள்ளாச்சி அருகே கதவை உடைத்து ரூ.3 லட்சம், வைர நகைகள் திருட்டு
பொள்ளாச்சி, பிப்.22
பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே கதவை உடைத்து ரூ.3 லட்சம் பணம் மற்றும் வைர நகைகளை திருடிச்சென்றவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
பொள்ளாச்சி-நெகமம்
கப்பினிபாளையத்தை சேர்ந்தவர்கள் ராமராஜ்(60), ஜமுனா தம்பதிகள். இவர்கள்
கப்பினிபாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்துவருகின்றனர்.
தோட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தென்காசி-தென்கரையை சேர்ந்த சச்சின்
என்பவரை வேலைக்கு சேர்த்தியுள்ளனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ராமராஜ்
தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார்.
இதைப்பயன்படுத்திக்கொண்ட
சச்சின் வீட்டுக்கு கதவை கடப்பாறையால் உடைத்து, பீரோவையும் உடைத்து அதில்
வைத்திருந்த ரூ.3 லட்சம் பணம், வைர வளையல்கள் இரண்டு, ஒரு ஜோடி கம்மல்
திருடிக்கொண்டு வீட்டில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தையும்
எடுத்துக்கொண்டு தப்பிவிட்டார்.
இருசக்கர வாகனத்தை நெகமம்
பேருந்துநிலையத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்தில் தப்பியதாக
தெரிகிறது. நெகமம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். ராமராஜ் எம்பி
எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தின் உறவினர் என்று கூறப்படுகிறது.
----

No comments