Breaking News

பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை வைத்து தபால் அனுப்பும் போராட்டம்

பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை வைத்து தபால் அனுப்பும் போராட்டம்

பொள்ளாச்சி, பிப்.19
 
 பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை வைத்து தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் இந்துமக்கள் கட்சியினர் ஈடுபட்டனர்.
 

 பொள்ளாச்சி மாவட்டமாக மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. தொழில் வர்த்தக சபை, வியாரிகள் சங்கம், விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் தனி மாவட்ட கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று இந்து மக்கள் கட்சியினர் சார்பில் பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை வைத்து பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தபால் அனுப்பி வைத்தனர். 

இந்துமக்கள் கட்சி கோவை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் கூறுகையில், பொள்ளாச்சியை மாவட்டம் ஆக்கவேண்டும் என்பது நீண்ட ஆண்டு கால கோரிக்கை. தமிழகத்தில் சிறிய பகுதிகள் எல்லாம் மாவட்டமாக மாற்றப்பட்டும் பொள்ளாச்சி மாவட்டமாக மாற்றப்படாமல் உள்ளது. 
 
ஆகவே பொள்ளாச்சி மாவட்டமாக மாற்றவேண்டி தபால் அனுப்பும் போராட்டத்தை துவங்கியுள்ளோம். பொதுமக்களும் மாவட்ட கோரிக்கை வைத்து முதல்வருக்கு தபால் அனுப்பவேண்டும். இல்லாவிட்டால் பொள்ளாச்சி மக்களின் கோரிக்கை முதல்வரை சென்றடையாது என்றார்.

----

 

No comments