Breaking News

காவல்துறையினர் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பவர்களாக இருக்கவேண்டும்

 




காவல்துறையினர் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பவர்களாக இருக்கவேண்டும்
 
ஐ.ஜி.பெரியய்யா அறிவுரை

பொள்ளாச்சி, ஜன.9

 
காவல்துறையினர் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர்களாக இருக்கவேண்டும் என மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

 பொள்ளாச்சி அடுத்த ஆர்.பொன்னாபுரம் பகுதியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் நியமன விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா பங்கேற்று பொதுமக்களுடன் உரையாடினார். தொடர்ந்து கிராம கண்காணிப்பு காவலரை அறிமுகம் செய்துவைத்ததுடன், கிராம காவல் கண்காணிப்பு அலுவலர் குறித்த தகவல் பலகையையும் திறந்துவைத்தார்.

 
தொடர்ந்து தனியார் திருமண மண்டபடத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, பொள்ளாச்சி உட்கோட்டத்தில் பணியாற்றும் காவலர்களிடையை உரையாற்றினார். மேலும், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

 நிகழ்வில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா பேசியது....

காவல்துறை என்பது மக்களுக்கு சேவையாற்றும் துறை. பொதுமக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர். பொதுமக்களின் நண்பர்களாக காவல்துறையினர் இருக்கவேண்டும். 

ொதுமக்கள் நிம்மதியாக வாழவேண்டுமென்றால் காவலர்கள் சிறப்பாக பணியாற்றவேண்டும். உலகின் மிகச்சிறந்த ஸ்காட்லாண்ட் யார்டு போலிஸாருக்கு இணையானது தமிழக காவல்துறை. இப்படி சிறப்பு வாய்ந்த காவல்துறையில் பணியாற்றுபவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றவேண்டும். 

காவல்துறையினர் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர்களாக இருக்கவேண்டும் என்றார்.
 நிகழ்வில், உடன் கோவை மாவட்ட ரூரல் எஸ்பி அருளரசு, பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

----

No comments