Breaking News

திருமூர்த்தி அணையிலிருந்து 11ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

  

திருமூர்த்தி அணையிலிருந்து 11ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு



 திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு வரும் 11ம் தேதி தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

 

பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் நீர்பகிர்மானம் செய்துகொள்ளவேண்டும். தமிழகத்தில் ஆழியாறு அணையிலிருந்து 50 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசன வசதிபெறுகின்றன. 

 இதில் திருமூர்த்தி அணையிலிருந்து நான்கு மண்டலங்காக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு மண்டலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் மற்றும் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு 5 சுற்றுக்கள் தண்ணீர் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். பிஏபி தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவற்றை கணக்கிட்டு பிஏபி அதிகாரிகள் முதல் மற்றும் இரண்டாம் மண்டலத்திற்கு நான்கரை சுற்று தண்ணீர் வழங்கினர். 

 இந்த ஆண்டு மூன்று மற்றும் நான்காம் சுற்றுக்கு தண்ணீர் வழங்கவேண்டும். இதில் மூன்றாம் சுற்றுக்கு  வரும் 11ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.  இந்நிலையில், திருமூர்த்தி அணையிலிருந்து வரும் 11ம் தேதி  தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நீர் திறப்பின் மூலம் 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.  வரும் 11ம் தேதி முதல் உரிய கால இடைவெளிவிட்டு  ஐந்து சுற்றுக்களாக  மொத்தம் 9500 மில்லியின் கன அடிக்கு(9.5 டிம்சி) மிகாமல் தேவைக்கு ஏற்ப தண்ணீர் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

No comments