Breaking News

பொள்ளாச்சியில் குதிரை பந்தயம்

 

பொள்ளாச்சியில் குதிரை பந்தயம்

பொள்ளாச்சி, ஜன.9

 
பொள்ளாச்சி குதிரை வளர்ப்பு சங்கத்தின் சார்பில் குதிரை வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக பொள்ளாச்சி அடுத்த எஸ்.சந்திராபுரத்தில் குதிரை பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன. ஐந்தரை அடி உயரம் கொண்ட காத்தியவாடி, மார்வாரி இன குதிரைகள் பங்கேற்றன. குதிரையின் மீது ஏறி சவாரி செய்தும்,  வண்டி கட்டியும் பந்தயத்தில் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

 
 
பந்தய தூரமாக 400 மீட்டர் நிர்ணயிக்கப்பட்டது, இதில் வெற்றி இலக்கை நோக்கி குதிரைகள் சீறிப்பாய்ந்ததை பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தனர்.வெற்றி பெற்ற குதிரை உரிமையாளர்களுக்கு பரிசு கோப்பைகள்  வழங்கப்பட்டது. 

 
குதிரை வளர்ப்பை ஊக்குவிப்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த  போட்டி நடத்தப்பட்டு வருவதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

No comments