தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றம் - சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்
தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றம்
சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்
பொள்ளாச்சி, ஜன.5
தமிழகத்தில் விவசாயிகளுக்கு் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பொங்கல் பரிசுத்தொகுப்புகளை செவ்வாய்க்
கிழமை வழங்கினார்.
உடன் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் கிருஷ்ணகுமார், சார்-ஆட்சியர் வைத்திநாதன்,வட்டாட்சியர் தணிகைவேல், அதிமுக ஒன்றியச்செயலாளர் தம்பு, நெகமம் முன்னாள் பேரூராட்சித்தலைவர் சோமசுந்தரம், ஒன்றியக்குழுத்தலைவர் விஜயராணி ரங்கசாமி உட்பட பலர்பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியது...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் கஷ்டங்களை தெரிந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார். கடந்த ஆண்டுபொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. தற்போது கரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதால் ரூ.2500 பொங்கல் பரிசாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
குடும்ப அட்டை உள்ள அனைவரும் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறமுடியும். இதுதவிர, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
No comments