தைப்பூசத்திற்கு தமிழக அரசு விடுமுறை அளித்தது வரவேற்கதக்கது- பாஜக மாநிலப்பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்
தைப்பூசத்திற்கு தமிழக அரசு விடுமுறை அளித்தது வரவேற்கதக்கது
பாஜக மாநிலப்பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்
பொள்ளாச்சி, ஜன.5
தைப்பூசத்திற்கு விடுமுறை அளித்தது வரவேற்கதக்கது என பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்
தெரவித்தார்.
கோவை தெற்கு மாவட்ட பாஜக ஆலோசனைக்கூட்டம் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் பிரிவு தனியார் திருமணமண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொருளாளர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கூட்டத்திற்கு பிறகு பத்திரிக்கையாளர்களிடம் எஸ்.ஆர். சேகர் கூறியதாவது...தமிழக அரசு முருகப்பெருமானின் முக்கிய விழாவான தைப்பூச திருவிழாவிற்கு விடுமுறை அளித்தது வரவேற்கதக்கது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி. டெல்லியில் அரசியல் கட்சியினர்தான் விவசாயிகள் போர்வையில் போராடி வருகிறார்கள். உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அரசு விநியோகம் செய்யவேண்டும் என்றார்.
கூட்டத்தில், பாஜக மாவட்ட பொறுப்பாளர் மோகன்மந்தராச்சலம், மாவட்டத்தலைவர் வசந்தராஜன், மாவட்ட நிர்வாகி தனபாலகிருஷ்ணன், குமரேஷ், -வழக்குரைஞர் துரை,கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments