அதிமுக முதல்வர் வேட்பாளரை பாஜகவும் ஏற்றுக்கொண்டுள்ளது-பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேட்டி
அதிமுக முதல்வர் வேட்பாளரை பாஜகவும் ஏற்றுக்கொண்டுள்ளது
பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேட்டி
பொள்ளாச்சி, ஜன.31
அதிமுக முதல்வர் வேட்பாளரை பாஜகவும் ஏற்றுக்கொண்டுள்ளது என கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
க ிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையத்தில் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் அயோத்தியில் ராமல் கோயில் கட்டுவதற்கான நிதிதிரட்டும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பாஜக துணைத்தலைவர்
அண்ணாமலை ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். மேலும், கிணத்துக்கடவை சேர்ந்த
சிறுமி ரித்தகாஸ்ரீ தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த
ரூ.5000மும், சிறுவன் விக்னேஷ் தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த
ரூ.600 தொகையும் ராமர் கோயில் கட்டுவதற்கு வழங்கினார்கள்.
நிகழ்ச்சி
முடிந்ததற்கு
பிறகு பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அண்ணாமலை
பேட்டி அளித்தார். பேட்டியின்போது கூறியது....அதிமுக என்பது பெரிய கட்சி.
அந்த கட்சியுடனான கூட்டணியை பாஜக தேசிய தலைமை உறுதிசெய்துள்ளது. அதேபோல்,
அதிமுகவின் முதல்வர் வேட்பாளரையும் பாஜக ஏற்றுக்கொண்டுள்ளது.
பாஜக கடந்த
தேர்தலில் பெற்ற வாக்குகளை விட நான்கு மடங்கு இந்த முறை அதிகமாக பெறும்.
திமுக தலைவர் ஸ்டாலின்
தொடர்ந்து கிராம சபைக்கூட்டங்கள், மக்களை சந்திப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறார். இந்துமக்களை அவமதித்து வந்த ஸ்டாலின் தற்போது வேலை கையில் எடுத்துள்ளார். இதன் மூலம் திமுவின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுள்ளது என்பது உறுதியாகிறது என்றார்.

No comments