Breaking News

பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை வைத்து விரைவில் கடையடைப்பு - கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி

பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை வைத்து விரைவில் கடையடைப்பு 


கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி

பொள்ளாச்சி.ஜன.31
கொமதேக சார்பில் பொள்ளாச்சி மாவட்டம் அமைக்க கோரி விரைவில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 
 

ொள்ளாச்சியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதற்கு வந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில்...குறைந்த மக்கள்தொகை உள்ள பகுதிகள் எல்லாம் மாவட்டங்களாக மாறிவிட்டது. 
 
ஆனால், கோவை மாவட்டத்தில் முக்கிய பகுதியாக உள்ள பொள்ளாச்சி. அதிக மக்கள்தொகை இருந்தும் மாவட்டமாக மாற்றப்படாமல் உள்ளது. இதற்கு அரசு தயங்கி வருவதற்கு காரணம் என்ன என்று புரியவில்லை. இதனால் பொள்ளாச்சி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மாவட்டமாக மாற்ற கோரி விரைவில் கடையடைப்பு போராட்டம் கொமதேக சார்பில் நடைபெற உள்ளது.
 
 இதற்கு மக்கள் ஆதரவும் வியாபாரிகள் ஆதரவும் கிடைக்கும். பொள்ளாச்சியில் பல்வேறு பணிகள் முடிவடையாமல் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பாதாள சாக்கடை போன்ற பணிகள் முடிவடையாமல் உள்ளது.
 
 மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் பொள்ளாச்சி பாலியல் பிரச்சினைக்கு ஒரே மாதத்தில் முடிவும், தீர்வும் கிடைத்திருக்கும். ஆனால், தற்போது உள்ள ஆட்சியாளர்கள் சிலரை காப்பாற்ற முயற்சி செய்து வருகின்றனர். ஆனைமலையாறு நல்லாறு திட்டம் மீண்டும் தேர்தல் வாக்குறுதி ஆகவே மாறிவிட்டது. 
 
சசிகலா வரவினால் அதிமுகவில் சலசலப்பு இருக்கும்.பொள்ளாச்சியின் வளர்ச்சிக்கு கொமதேக சார்பில் பல்வேறு திட்டங்கள் தீட்டி வைக்கப்பட்டுள்ளது என்றார். உடன் மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் உட்பட பலர் இருந்தனர்.

 

No comments