சிறுபாண்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது அதிமுக-பொள்ளாச்சி வி.ஜெயராமன் கருத்து
பொள்ளாச்சி,நவ.22
சிறுபாண்மை மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் கட்சி அதிமுக என சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வடசித்தூர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் அர்ச்சனா மற்றும் குணவர்த்தனி என்ற இரு மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று பொள்ளாச்சி சட்ட மன்ற அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமைநடைபெற்றது.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முத்துகருப்பண்ணசாமி, பொள்ளாச்சி வடக்கு கூட்டுறவு வங்கித்தலைவர் தம்பு, தென்னிந்திய தென்னை சாகுபடியாளர் சங்க செயலாளர் ஆர்.ஏ.சக்திவேல், முன்னாள் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஜேம்ஸ்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் பங்கேற்று அர்ச்சனா மற்றும் குணவர்த்தினிக்கு தனது சொந்த நிதியிலிருந்து தலா பத்தாயிரம் வழங்கினார். மேலும் அவர்களை சால்வை அணிவித்து பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது.... மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தாமல் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் தனியார் கல்லூரிகளை வலியுறுத்தினார். அதன்படி நிதி ஒதுக்கி அரசே கட்டணத்தை செலுத்தும் என அறிவித்துவிட்டார்.
முதல்வர் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்துகொண்டு, கோரிக்கை வைத்தார்.
இதுபோன்று அரசு ஒரு நல்ல திட்டத்தை அறிவிக்கப்போகிறது என தெரிந்துகொண்டு அரசு அறிவிப்பதற்கு முன்பு அவர் அந்த திட்டம் சம்பந்தமாக அரசுக்கு கோரிக்கை வைப்பது என ஸ்டாலினுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதிலும் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்.
2021 அதிமுக ஆட்சி அமையும். மக்களவைத் தேர்தல் என்பது வேறு சட்டமன்ற தேர்தல் என்பது வேறு தமிழகத்தில் மீண்டும் அமைதியான ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
எளிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் அதிமுக ஆட்சியை விரும்புகின்றனர்.
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவது அதிமுக அரசு. அதிமுகவுக்கு தோல்வி என்ற வார்த்தைக்கே இடமில்லை என தெரிவித்தார்.
Reviewed by Cheran Express
on
January 14, 2021
Rating: 5

No comments