Breaking News

டாஸ்மாக்கடையில் திருட்டு முயற்சி

 பொள்ளாச்சி. நவ. 23. 


பொள்ளாச்சி அருகே கணபதிபாளையத்தில் டாஸ்மாக் கடையில் இன்று அதிகாலை திருட்டு முயற்சி நடைபெற்றுளளது.
  
பொள்ளாச்சி அடுத்த கணபதிபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை எண் 22 74 செயல்பட்டு வருகிறது. இந்த கடையை நேற்று வழக்கம்போல் அதன் சூப்பர்வைசர் மகேந்திர பூபதி, விற்பனையாளர் பாபு ஆகியோர் பூட்டி சென்றுள்ளனர். இந்நிலையில் கடையில் அதிகாலையில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தவுடன் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments