Breaking News

குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் ஸ்டாலின் பதவி விலகவேண்டும் - பொள்ளாச்சி வி.ஜெயராமன்

குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் ஸ்டாலின் பதவி விலகவேண்டும்  பொள்ளாச்சி வி.ஜெயராமன்



பொள்ளாச்சி
 திமுகவை கண்டித்து பொள்ளாச்சியில் அதிமுக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியது...
 

திமுக நடத்திய கூட்டத்தில் என் மகன் குற்றம் செய்தார், என் மகன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக தெரிவித்துள்ளது. 6 முறை பொள்ளாச்சி பகுதியில் போட்டியிட்டு 4 முறை வெற்றிபெற்றுள்ளேன். சாதாரண விவசாயியான என்னை மக்கள் ஆதரித்து வெற்றிபெறச்செய்தார்கள். 

 
பொள்ளாச்சி வழக்கை முதன்முதலாக காவல்துறையை தொடர்புகொண்டு பிப்ரவரி 24ம் தேதி 2019ம் ஆண்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன். பாதிக்கப்பட்ட பெண்ணை புகார் கொடுக்க சொன்னதே நான்தான். ஆனால், தேர்தலுக்காக மார்ச் 11ம் தேதி  ஸ்டாலின் என் மீதும், என் குடும்பத்தின் மீது  குற்றம் சுமத்தினார். நானும், என் குடுபத்தாறும் குற்றவாளிகள் என்றால் எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயார் என அப்போதே கூறினேன்.


 ஆதாரம் இல்லாமல் என் மீது குற்றம்சாட்டிய ஸ்டாலின் மற்றும் சில பத்திரிக்கைகள் மீது நஷ்டஈடு கேட்டு வழக்குதொடர்ந்துள்ளேன். நீதிமன்றத்தில் எந்த ஆதாரமும் ஸ்டாலின் தரப்பு கொடுக்கவில்லை. சிறிய ஆதாரம் இருந்தாலும் திமுக குடும்பத்தின் சார்பாக கொடுத்தால் அரசியல்பொது வாழ்க்கையில் இருந்து நான் விலக்கொள்கிறேன். ஆதாரத்தை கொடுக்கமுடியாவிட்டால் ஸ்டாலின் திமுக தலைவர் பதவியில் இருந்துவிலகவேண்டும். 

 
இது எனது சவால். ஆதாரத்தை சிபிஐ, நீதிமன்றம் என யார் இடத்தில் வேண்டுமானாலும் ஸ்டாலின் கொடுக்கட்டும். பொள்ளாச்சி பிரச்சனையை தேர்தலுக்காக திமுக பயன்படுத்துகிறது. தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக மீண்டும் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது என்றார்.

 

No comments