தேர்தலுக்காக பெண்களை இழிவுபடுத்துகிறது திமுக - அமைச்சர் வேலுமணி பேச்சு
தேர்தலுக்காக பெண்களை இழிவுபடுத்துகிறது திமுக
அமைச்சர் வேலுமணி பேச்சு
தேர்தலுக்காக ஆதாரம் இல்லாமல் பெண்களை இழிவுபடுத்துகிறது திமுக என அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்தார்.
பெண்களை இழிவாக பேசியதாக உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சூலூர் திமுக ஒன்றியச்செயலாளரை கண்டித்தும், திமுக மக்கள் சபை
அமைச்சர் எஸ்பிவேலுமணி, சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலை வகித்தனர். அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் வளர்மதி, கோகுலஇந்திரா, கொள்கை பரப்பு துணைச்செயலாளர் விந்தி யா ஆகியோர் பங்கேற்று சிறப்புரை யாற்றினர்.
அமைச்சர் எஸ்பிவேலுமணி பேசியது...
பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால், ஒருவர் பாதிக்கப்பட்டதை பெரிதாக்கி எந்த ஆதாரமும் இல்லாமல் பொள்ளாச்சியை சேர்ந்த 200 பெண்கள் பாதிக்கப்பட்டதாக திமுக கூறுவது பெண்களை இழிவு படுத்து செயலாகும். ஓட்டுக்காக பெண்களை இழிவு படுத்துகிறது திமுக.
கோவையில் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் சபைக்கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் குண்டர்களால் தாக்கப்பட்டார். உதயநிதி பெண்களை இழிவு படுத்திபேசுகிறார். திமுக சூலூர் ஒன்றியச்செயலாளர் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இப்படி திமுகவினர் இருந்துகொண்டு அதிமுகவினர் மீது குற்றம்சாட்டுகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதலில் சட்டப்பேரவை துணைத்தலைவர்தான் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தவர்.
அதிமுகவில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், திமுகவில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திமுக மிகவும் மோசமான கட்சி. தேர்தலுக்காகவும், ஓட்டுக்காகவும் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். ஆதாரம் இல்லாமல் பொள்ளாச்சி வழக்கில் புகார் தெரிவிக்கின்றனர்.
ஓட்டுக்காக கோவை மாவட்ட பெண்களை இழிவுபடுத்துகின்றனர் திமுகவினர். திமுக எப்போதுமே நில அபகரிப்பு, கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து மற்றும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பார்கள். உலக பணக்கார வரிசையில் திமுகவினர் உள்ளனர். விஞ்ஞான ஊழல் செய்பவர்கள் திமுகவினர். 2ஜி ஊழல் மூதல் பல்வேறு ஊழல்களை திமுக செய்துள்ளது.
மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது முதல் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அதிமுக அரசு வழங்குவதை திமுகவினர் தடுத்துவருகின்றனர். ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வராக இருந்தபோது மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. திமுக கூட்டணி ஆட்சிகாலத்தில் இலங்கையில் 50 ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். 1.50 லட்சம்பேர் கொல்லப்பட்டனர். இதற்கு உறுதுணையாக திமுக இருந்தது.
தேர்தலுக்காகவும், ஓட்டுக்காகவும் பொள்ளாச்சி பிரச்சனையை கையில் எடுத்து ஆதாரம் இல்லாமல் பொய் சொல்லும் ஸ்டாலின் எப்போதுமே முதல்வர் ஆக முடியாது என்றார்.
நிகழ்வில், முன்னாள் அமைச்சர் செ.தாமோரதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், எட்டிமடை சண்முகம், சின்ராஜ், கஸ்தூரிவாசு, கந்தசாமி, அதிமுக மகளிர் அணி செயலாளர் கண்ணம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.



Ok
ReplyDelete