கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி
பொள்ளாச்சி. நவ.24 பெங்களூருவை சேர்ந்த இளைஞர் பொள்ளாச்சி அருகே தனக்குத் தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூர், பிரகாஷ் நகரை சேர்ந்தவர் குருவர்தன்( 45 ), இவருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் கோவையில் உள்ள ஒரு கடையில் வந்து பாதரசம் வாங்கிக்கொண்டு பொள்ளாச்சி வந்துள்ளார். பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் சாலையில் உள்ள பூசாரிபட்டி பகுதிக்கு திங்கள்கிழமை மாலை சென்றுள்ளார். அங்குள்ள கன்னியம்மன் கோயில் அருகே பாதரசத்தை குடித்துவிட்டு தனக்குத் தானே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உடல் நிலை மோசம் அடைந்ததால் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளது . பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் மற்றும் கோமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments