Breaking News

வேல் யாத்திரைக்கு பொள்ளாச்சியில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு

 பொள்ளாச்சி, நவ.23

 கோவையில் இருந்து பழனி சென்ற வேல் யாத்திரைக்கு பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர் உற்கசாக வரவேற்பு அளித்தனர்.

 திங்கள்கிழமை கோவையில் பாஜக வேல் யாத்திரை துவங்கி பொள்ளாச்சி வழியாக பழனிக்கு சென்றது. மாநில பாஜக தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை, மாநிலப்பொதுச்செயலாளர் நரேந்திரன், மத்திய அமைச்சர் முரளிதரன் ஆகியோர் வேல் யாத்திரையாக வந்தனர். 

அவர்களுக்கு பொள்ளாச்சி காந்திசிலை கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவை தெற்கு மாவட்டத்தலைவர் வசந்தராஜன், பொதுச்செயலாளர்கள் ஆனந்த், அப்பு, நிர்வாகிகள்  கோவிந்தராஜ், துரை, சிவக்குமார், தனபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். 

வேல் யாத்திரை வந்தவர்களுக்கு கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், வேல் மற்றும் முருகன் சிலைகளையும் வழங்கினர்.

----

No comments