Breaking News

திரைப்பட பாடலாசிரியர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

 பொள்ளாச்சி

பொள்ளாச்சியை சேர்ந்த திரைப்பட பாடலாசிரியர் குமாரதேவன் உடல்நலக்குறைவால் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
 பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்தவர் குமாரதேவன். திரைப்பட பாடலாசிரியர். வாழவைத்த  தெய்வம், யானை பாகன் உள்ளிட்ட 200 படங்களுக்கும் மேல் 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். 

பக்திபாடல்களையும் அதிக அளவில் எழுதியுள்ளார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். 

கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். அவரது உடல் வடுகபாளையத்தில் உள்ள மயானத்தல் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. குமாரதேவனுக்கு லட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

No comments