அரசு பள்ளியில் வாழைத்தோட்டம் அமைத்து விவசாய புரட்சி
அரசு பள்ளியில் வாழைத்தோட்டம் அமைத்து விவசாய புரட்சி
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே அரசுப்பள்ளியில் வாழைத்தோட்டம் அமைத்து மாணவர்களுடன், ஆசிரியர்களும் விவசாய புரட்சி செய்துள்ளனர்.
உலக அளவில் தற்ச்சார்பு உள்ள தொழிலாக இருந்துவருவது விவசாயம் மட்டும்தான். யார் என்ன தொழில் செய்தாலும், அவர்கள் உணவுத்தேவைக்காக விவசாயம் செய்பவர்களை அனுக்கித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் விவசாயம் மட்டும்தான் உணவுத்தேவையை பூர்த்தி செய்கிறது.
ஆடம்பர வாழ்க்கை, சொகுசுகார்கள், கோடிக்கணக்கில் பணம் என எது வைத்திருந்தாலும் உணவு, குடிநீர் இல்லாவிட்டால் வாழமுடியாது. ஆகவே விவசாயம்தான் தற்சார்புள்ள தொழில். விவசாயத்தை புறக்கணித்தவர்கள் தங்கள் தற்சார்பை இழந்துவிடுகின்றனர்.
பாரம்பரியமாக விவசாயம் செய்துவந்தவர்களின் வாரிசுகளில் பலர் இன்று விவசாயத்தை தவிர்த்துவிட்டு வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். விவசாயம் குறித்து விழிப்புணர்வு இல்லாமலும், அது குறித்த ஆர்வம் இல்லாமலும் இதுபோன்று மாற்றுத்தொழிலுக்கு செல்கின்றனர்.
ஆகவே விவசாயத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு பள்ளி பருவத்திலேயே உருவாக்க வேண்டி பொள்ளாச்சி அடுத்த நாயக்கன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தண்டபானி
ஆசிரியர், மாணவர்களுடன் இணைந்து இயற்கை விவசாயம் மூலம் வாழைத்தோப்பை உருவாக்கி விவசாயத்தில் புரட்சி செய்துள்ளனர்.
பொள்ளாச்சி
தெற்கு பகுதியில் அமைந்துள்ளது நாயக்கன்பாளையம் கிராமம். இங்கு அரசு
நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. தலைமை ஆசிரியருடன் சேர்த்து 8
ஆசிரியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். 180 மாணவர்கள் படித்துவருகின்றனர்.
இந்த பள்ளி 1.25 ஏக்கர் பரப்பு கொண்டது. இதில் பள்ளி வகுப்பறை கட்டடங்கள்
போக மீதம் சுமார் 50 சென்ட் இடம் காலியாக உள்ளது. இந்த இடத்தில் தேசிய
பசுமைப்படையின் நிதியுதவியுடன் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள்
இணைந்து விவசாயம் செய்ய முடிவு செய்தனர்.
இதற்காக 50 சென்ட் இடத்தை உழுது,
அதில் சொட்டுநீர் பாசனம்
அமைத்தனர். அதில் 150க்கும் அதி கமான வாழைக்கன்றுகளை நடவு செய் தனர்.
பள்ளி
வளாகத்தில் உள்ள ஆழ்துளை கிணறு, தொட்டி ஆகியவற்றை பயன்படுத்தி
சொட்டுநீர்ப்பாசனம் மூலம் நீரை வாழைக்கு பாசனம் செய்தனர். வாழைக்கு இயற்கை
உரம் வைத்து பராமரித்துவந்தனர்.
9 மாதங்களை கடந்த நிலையில் தற்போது
வாழைகளில் பெரிய அளவில் வாழைத்தார்களை பார்க்கமுடிகிறது. சில நாட்கள்
அறுவடைக்கு தயாராகிவிடும். பள்ளிக்கு சென்றால் பள்ளி என்ற நினைவுகள் மாறி
ஒரு பெரிய விவசாய தோட்டத்திற்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
நிலத்தை
உழவு செய்ததில் இருந்து வாழை தார் விடும் வரை மாணவர்களை விவசாயத்தில்
ஈடுபடுத்தியுள்ளதால் மாணவர்களுக்கு விவசாயம் குறித்த ஆர்வமும்,
விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று பெருமைப்படுகின்றனர் பள்ளி
நிர்வாகத்தினர்.
பள்ளி தலைமை ஆசிரியார் தண்டபானி கூறுகையில், பொள்ளாச்சி விவசாயம் சார்ந்த பகுதி. தற்போதுள்ள இளைய தலை முறையினரில் பலர் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டாமல் இருந்துவருகின்றனர். அதனால், பள்ளி பருவத்தில் விவசாயம் குறித்து ஆர்வம், விழிப்புணர்வு, நீர்மேலாண்மை போன்றவை குறித்து செயல்முறையாக நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்.
எங்கள் பள்ளியி ல் வாழைத்தோட்டம் அமைத்து தற்போ து அது அறுவடைக்கு தயாராகும் நி லையில் உள்ளது. இந்த வாழைத்தார் களை விற்பனை செய்து அதில் கிடை க்கும் லாபத்தில் மேலும் விவசா யத்தை பெருக்குவோம்
என்றார்.






No comments