Breaking News

பொள்ளாச்சியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

 

பொள்ளாச்சியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா


பொள்ளாச்சி, ஜன.17
 
 பொள்ளாச்சியில் எம்ஜிஆர் பிறந்தநாள்விழா ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.
 
 
 
பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு சட்டப்பேவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மரியாதை செய்தார். 
 
ேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி பேருந்துநிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருப்படத்திற்கும், பொள்ளாச்சி அடுத்த டி.நல்லிக்கவுண்டன்பாளையம் பகுதியில் எம்ஜிஆர் சிலைக்கும் சட்டப்பேரவை துணைத்தலைவர் மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 
 
எம்ஜிஆரின் சிறப்பு குறித்து சட்டப்பேரவை துணைத்தலைவர் பொதுமக்களிடையே கூறினார். 
 
உடன் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் கிருஷ்ணகுமார், அதிமுக நிர்வாகிகள் ஆர்.ஏ.சக்திவேல், தம்பு, ராதாமணி, வீராசாமி
ஜேம்ஸ்ராஜா, ரகுபதி, சுந்தரம், கனகு,அருணாச்சலம் உட்பட பலர் இருந்தனர்.



No comments