பாஜக சார்பில் பொங்கல் விழா
பாஜக சார்பில் பொங்கல் விழா
பொள்ளாச்சி
பாஜக சார்பில் பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூரில் பொங்கல் விழா நடைபெற்றது.
நம்ம ஊரு பொங்கல் என்ற தலைப்பில் கிராமங்களில் பாஜக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூரில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். பாஜகவினர் பெத்தநாயக்கனூர் கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் விழாவை நடத்தினர். பெண்களுக்கு கோலப்போட்டியும், குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டியும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

No comments