பொள்ளாச்சி அரசு மருத்துவனை மருத்துவர்களுக்கு கரோனா தடுப்பூசி
பொள்ளாச்சி அரசு மருத்துவனை மருத்துவர்களுக்கு கரோனா தடுப்பூசி
பொள்ளாச்சி, ஜன.16
பொள்ளாச்சி
அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சனிக்கிழமை கரோனா
தடுப்பூசி போடும் பணியை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்
துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை கடந்த வாரம் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சனிக்கிழமை தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக
கோவை மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு
தேவையான 73 ஆயிரத்து 200 கரோனோ தடுப்பூசிகள் கடந்த 13-ம் தேதி மதியம் கோவை
ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு
கொண்டு வரப்பட்டன.
இங்கிருந்து கோவைக்கு 40 ஆயிரத்து 600,
ஈரோட்டுக்கு 13800, திருப்பூருக்கு 13500, நீலகிரிக்கு 5300 என
தடுப்பூசிகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
கோவை
மாவட்டத்தில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,சூலூர் , மேட்டுப்பாளையம்,
பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகள் மற்றும் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப
சுகாதார நிலையம் என 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முதல் நாளில் ஒரு
மையத்தில் 100 பேர் வீதம் மொத்தம் 500 பேருக்கு அவர்களின் விருப்பத்தின்
அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும்
சுகாதாரப் பணியாளர்களின் விவரங்கள் ஏற்கனவே இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்,
மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை
சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கி வைத்தார். அறுவை
சிகிச்சை நிபுணர் கார்த்திகேயன் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

No comments