பொள்ளாச்சி நகரத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆய்வு
பொள்ளாச்சி, நவ.30. பொள்ளாச்சி நகரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் இன்று ஆய்வு செய்தார். பொள்ளாச்சி நகரத்தில் உள்ள 36 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர, பாலங்கள், சாக்கடை கால்வாய்கள் சரிசெய்தல், சாலை வசதி ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இன்று காலை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆய்வுசெய்து பணிகளில் ஏதாவது குறைகள் இருக்கிறதா என்பதை பொதுமக்களிடம் கேட்டறிந்தார். உடன் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன் ,நகராட்சி ஆணையர் காந்திராஜ், நகராட்சி பொறியாளர் மேனகா,அதிமுக நிர்வாகிகள் ஜேம்ஸ்ராஜா, அருணாசலம், கனகு, வீராசாமி ரமேஷ் உட்பட பலர் இருந்தனர்.



No comments