11 தடுப்பணைகள் அமைக்க பூமி பூஜை
பொள்ளாச்சி, டிச.2 பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் 11 தடுப்பணைகள் அமைக்க பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் ஆர்.பொன்னாபுரம் ஊராட்சியில் சிற்றோடையில் தடுப்பணைகள் அமைக்க வேண்டி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் சட்டப்பேரவை துணைத்தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை அடுத்து 11 தடுப்பணைகள் அமைக்க ரூ.103.68 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, தடுப்பணைகள் கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பூமி பூஜையை துவக்கி வைத்தார். உடன் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், வட்டாட்சியர் தணிகைவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகன், விவேகானந்தன், மாவட்ட கவுன்சிலர் ராதாமணி,ஒன்றியக்குழுத்தலைவர் விஜயராணிரங்கசாமி, துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments