Breaking News

சாலையோரத்தில் சரிந்த சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி

 




பொள்ளாச்சி, டிச.8
கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் சரிந்த சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றி வந்த லாரியால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 நெகமம் அருகே உள்ள எரிவாயு நிரப்பும் குடோனில் இருந்து செவ்வாய்க்கிழமை 350 சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றிக்கொண்டு லாரி கிணத்துக்கடவு வழியாக உக்கடம் சென்றது. லாரி பெரியகளந்தை சாலையில் இருந்து பொள்ளாச்சி-கோவை முக்கிய சாலையை அடையும் இடத்திற்கு அருகே வேரு ஒரு வாகனத்தை முந்த முயன்றபோது சாலையோர பள்ளத்தில் சரிந்தது. லாரி சரிந்த இடம் மின்வாரிய அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருந்ததால் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார், தீயணைப்பு துறையினர், எரிவாயு நிறுவனத்தினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் உதவியுடன் லாரியை மீட்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்வாரிய அலுவலகமும் சிறிது நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பாதுகாப்பட்டது.

---

No comments