Breaking News

குடிநீர் பிரச்சினைக்காக சாலைமறியல்

 

              பொள்ளாச்சி, நவ, 27.பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் காளியாபுரம் பிரிவு பகுதியில் 100க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு கடந்த 4 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநயோகம் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை50க்கும் அதிகமான பொதுமக்கள் டாப்சிலிப் பொள்ளாச்சி சாலையில் காளியாபுரம் பிரிவில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு நடத்தி குடிநீர் வழங்க அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் டாப்சிலிப் பொள்ளாச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments