Breaking News

வாலிபர் அடித்துக்கொலை

 வாலிபர் அடித்துக்கொலை பொள்ளாச்சி. நவ. 25. நெகம் அருகேவாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



நெகமம் அடுத்த காணியம் பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி என்கிற முத்து (50) டிரைவர் மற்றும் விவசாயி. இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராம்குமார்( 24) இருவரும் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி மது அருந்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கருப்புசாமி ராம்குமாரும், கருப்பு சாமியின் தோட்டம் அருகே மது அருந்தியதாக தெரிகிறது. ராம்குமாரின் அண்ணன் சக்திவேல் (34 )அங்கு சென்று ராம்குமாரை கண்டித்துள்ளார்.
 இதைப்பார்த்த கருப்புசாமி உனது தம்பியாக இருந்தாலும் எனது இடத்தில் வந்து நீ இதை கேட்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
இதில் கருப்புசாமி க்கும் சக்தி வேலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் சக்திவேல் கருப்புசாமியை கட்டையால் தலையில் தாக்கியதில் பலத்த காயமடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் கருப்புசாமி உயிரிழந்தார். இதுகுறித்து நெகமம் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

No comments