ஆனைமலையில் இலவச உணவு பெட்டி
பொள்ளாச்சி. ஜன. 2 ஆனைமலையில் உணவு இல்லாதவர்களுக்கு உணவளிக்கும் வகையில் மாசாணியம்மன் கோயில் அருகே அறம் செய்வோம் அமைப்பு சார்பாக உணவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
கரோனா காலகட்டத்தில் உணவு இல்லாதவர்களுக்கு ஆனைமலை அறம் செய்வோம் அமைப்பு சார்பில் தினசரி 30 முதல் 40 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் அருகே யாசகர்கள் அதிகமாக இருப்பதாலும் அவர்களுக்கு மற்றும் உணவு இல்லாதவர்களுக்கு உணவு எளிதில் கிடைக்கும் வகையில் அறம் செய்வோம் அமைப்பு சார்பில் உணவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெட்டியில் தினசரி அறம் செய்வோம் அமைப்பு சார்பில் உணவு வைக்கப்படும்.
உணவு தேவைப்படுபவர்கள் அந்த உணவு பெட்டியில் வந்து உணவை எடுத்து அருந்திக் கொள்ளலாம். அதேபோல் உணவு கொடுக்க விரும்புபவர்களும் இந்த பெட்டியில் கொண்டு வந்து உணவு வைத்து செல்லலாம் எனவும் அந்த அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அறம் செய்வோம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்துல்வாகித் கூறுகையில்... மாசாணியம்மன் கோயில் அருகே யாசகர்கள் அதிகமாக உள்ளனர், மேலும் உணவு கிடைக்காமல் பலர் தவிக்கும் நிலை உள்ளது. இதனால், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் அருகே எங்கள் அமைப்பு சார்பில் உணவு பெட்டி வைத்துள்ளோம். இதில் தினசரி உணவு வைக்கப்படும். தேவைப்படுபவர்கள் வந்து உணவை எடுத்து செல்லலாம். அதேபோல் உணவு நன்கொடை வழங்க விரும்புபவர்களும் இதில் கொண்டு பொட்டலங்களாக வைத்து செல்லலாம் என்றார்.
ஆனைமலையில் இலவச உணவு பெட்டி
Reviewed by Cheran Express
on
January 14, 2021
Rating: 5
Reviewed by Cheran Express
on
January 14, 2021
Rating: 5




No comments