மான் கறி சமைக்க முயன்றவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம்
மான் கறி சமைக்க முயன்ற 4 பேருக்கு ஒரு லட்சம் அபராதம்
பொள்ளாச்சி. டிச. 21.
செந்நாய்கள் வேட்டையாடிய மானின் இறைச்சியை எடுத்து சமைக்க முயன்ற 4 பேருக்கு வனத்துறை சார்பில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட தனியார் எஸ்டேட் பகுதியில் செந்நாய்கள் வேட்டையாடிய மானின் இறைச்சியை எடுத்து சிலர் சமைப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்படி, வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன், வனவர்கள் முனியாண்டி, சக்திவேல் கொண்ட குழுவினர் ஒரு குடியிருப்பு பகுதியில் மான் இறைச்சி சமைக்க முயன்றதை உறுதி செய்தனர்.


No comments