தமிழக - கேரள எல்லையில் சார்-ஆட்சியர் ஆய்வு
தமிழக - கேரள எல்லையில் சார்-ஆட்சியர் ஆய்வு
பொள்ளாச்சி, ஜன.8
பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையில் சார்-ஆட்சியர் வைத்திநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவிவருகிறது. கேரள மாநிலத்தின் அண்டை மாநிலமாக தமிழகம் இருப்பதால் கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை முதல் தமிழக கேரள எல்லையான மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புனி, ஜமீன்காளியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக கால்நடைத்துறை சார்பில் கேரளாவில் இருந்துவரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
இந்நிலையில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை சார்-ஆட்சியர் வைத்திநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

No comments