Breaking News

கோவை வனக்கோட்டத்தில் யானை - மனித மோதலை தடுக்க சிறப்பு வன எல்லை இரவு ரோந்து குழுக்கள் அமைப்பு; மாவட்ட வன அலுவலர் தகவல்

 

கோவை வனக்கோட்டத்தில் யானை-மனித மோதலை தடுக்க சிறப்பு வன எல்லை இரவு ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் அவ்வப்போது ஊருக்குள் யானைகள் நுழைவதும், வன எல்லைக்கு அருகே யானை-மனித மோதல் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், மனித உயிரிழப்பு மற்றும் பயிர் சேதாரங்களைத் தடுப்பதற்காக கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் அறிவுறுத்தலின்பேரில், ஆல்பா, பீட்டா, காமா என மூன்று சிறப்பு எல்லை இரவு ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



No comments