Breaking News

விலையில்லா ஆடு வழங்கும் நிகழ்வில் குளறுபடி - அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

 


விலையில்லா ஆடு வழங்கும் நிகழ்வில் குளறுபடி

அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

பொள்ளாச்சி, ஜன.7
 
 திப்பம்பட்டியில் நடைபெற்ற விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்வில் குளறுபடி எனக்கூறி  பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
 
 

பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டி இளநீர் வணிக வளாகத்தில் திப்பம்பட்டி ஊராட்சியை சேர்ந்த திப்பம்பட்டி, கொள்ளுப்பாளையம் பகுதி மக்களுக்கு வியாழக்கிழமை விலையில்லா ஆடுகள் வழங்கும் நிழ்ச்சி நடைபெற்றது.
 
 கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். அமைச்சர் நிகழ்ச்சியை துவக்கி வைத்துவிட்டு அங்கிருந்து சென்றபிறகு சிறிது நேரத்தில் ஆடுகள் வழங்குவதில் குளறுபடி எனக்கூறி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 
 

ஒரு பயனாளிக்கு நான்கு ஆடுகள் வழங்குவதற்கு பதிலாக இரண்டு ஆடுகள் மட்டுமே வழங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து,சிறிது நேரத்தில் கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சு நடத்தி சமரசம் செய்தனர்.
 நான்கு ஆடுகளுக்கு பதிலாக இரண்டு ஆடுகள் வழங்கிவிட்டு, மீதமுள்ள இரண்டு ஆடுகளுக்கு அதற்கான பணத்தை வழங்கியுள்ளனர். பணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சில பயனாளிகள் பணத்தை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இரண்டு ஆடுகளுக்கு வழங்கும் தொகையையும் கூறியபடி வழங்காமல் குறைத்து வழங்குவதாகவும் புகார் எழுந்தது. அந்த பிரச்சனையும் சிறிது நேரத்தில் சரிசெய்யப்பட்டதால்  பொதுமக்கள் கலைந்துசென்றனர். 

 விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது ஆடுகள் வழங்குவதில் குளறுபடிகள் ஏற்படுவது, திட்டத்தின் மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கையை குறைக்கும் வகையில் உள்ளது.


 

No comments