Breaking News

இலவச மின்சாரத்தை நிறுத்துவதாக மத்திய அரசு கூறவில்லை-பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை

 


தமிழகத்தில் இலவச மின்சாரத்தை நிறுத்துவதாக மத்திய அரசு கூறவில்லை

பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கருத்து

பொள்ளாச்சி, டிச.20
 தமிழகத்தில் இலவச மின்சாரத்தை நிறுத்துவதாக மத்திய அரசு கூறவில்லை, புதிய மின்திட்டம் குறித்து திமுக தவறாக பிரச்சாரம் செய்வதாக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
 
 பொள்ளாச்சி அடுத்த ஜக்கார்பாளையம் கிராமத்தில் கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பாக புதிய வேளாண் சட்ட நன்மைகள் குறித்து விளக்கமளித்தல், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,  அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை துவக்கி வைத்தல் ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
 கோவை தெற்கு மாவட்டத்தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார்.  பாஜக மாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்தராச்சலம், கிணத்துக்கடவு பாஜக கிழக்கு ஒன்றியத்தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் சதீஷ்குமார்,  மாநில செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், ஊடக பிரிவு மாவட்டத்தலைவர் தனபாலகிருஷ்ணன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அண்ணாமலை பேசியதாவது...
விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியை சுற்றி உள்ள பஞ்சாப், ஹரியானாவை
சேர்ந்த விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் .
 விவசாய சட்டங்கள் குறித்து, தமிழக பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தி விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயம் குறித்து பேசுவதே பெருமையான விஷயம்.
சுதந்திரம் வாங்கி 70 ஆண்டுகளில் விவசாயம் நலிவடைந்த நிலையில் தான் இருந்து வருகிறது.
60 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் விவசாயத்திற்காக கவனம்
செலுத்தவில்லை. ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பிரதமர்
மோடியால் உரத் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கடன் வாங்கி கூலி கொடுக்கும் நிலையை மாற்றுவதற்காக தான் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது.இதனால், விவசாயிகள் தலைகுனிந்து வாழ வேண்டிய நிலை மாறியுள்ளது.
 காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் 72 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். 
  பஞ்சாப் மாநிலத்தில் 16 ஆயிரம் இடைத்தரகர்கள் உள்ளனர். இடைத்தரகர்களுக்கு உதவியாளர்களாக 2.5 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் தான் தற்போது டெல்லியில் போராட்டத்தை நடத்துவதற்கு தூண்டுதலாக இருந்துள்ளனர். இடைத்தரகர்கள் கையில் விவசாயம் சிக்கி விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கொண்டு வந்தது தான் தற்போது உள்ள மூன்று சட்டங்களில் முதல் சட்டம். இடைத்தரகர்கள் கையில் இருந்து விவசாயிகளை காத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதாகும் இரண்டாவது சட்டம். விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய உத்திரவாதம் தருவதுதான் மூன்றாவது சட்டம்.  இந்த மூன்று சட்டங்களையும் காங்கிரஸ், திமுக எதிர்த்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து சட்டங்களையும் ஸ்டாலின் எதிர்த்துவருகிறார். எதிரிகட்சியாக திமுக செயல்படுகிறது. 2019 பாராளமன்ற தேர்தலின்போது நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளை திமுக கூறி அதிக எம்பிக்களை கைப்பற்றியும். ஆனால், அந்த எம்பிக்கள் மற்றும் திமுகவின் செயல்பாடுகள் தற்போது மக்களுக்கு புரிந்துவிட்டது. தமிழகத்தில் இலவச மின்சாரத்தை மத்திய நிறுத்தும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. அதை திமுக தவறாக மக்களுக்கு கூறிவருகிறது.ஊழல் கட்சியான திமுகவின் சகாப்தம் வரும் 2021 தேர்தலுடன் முடிந்துவிடும் என்றார். நிகழ்வில் ஜக்கார் பாளையம் ஊராட்சி தலைவர்
குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.




       

No comments