Breaking News

பொள்ளாச்சி அருகில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு பெயர் மாற்றம்


பொள்ளாச்சி அருகில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு பெயர் மாற்றம் 

பொள்ளாச்சி.ஜன.28

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட்ட பகுதியாகும் இங்கு யானை, சிறுத்தை, புலி,கரடி அபூர்வ வகை தாவரங்கள் உள்ளன,

 பல வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் வசித்த மலைவாழ் மக்கள் தற்போது குரங்கு அருவி என அழைக்கப்படும் அருவிக்கு கவியருவி என பெயர் வைத்து அழைத்து வந்தனர்.

 மேற்கு தொடர்ச்சி மலையில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு எடுத்து வனப்பகுதி வழியாக வந்து நீர்வீழ்ச்சியாக உருவகிக்கிறது.

நீர்வழித்தடங்களில் வசிக்கும் பறவைகள் நீர் அருந்துவதற்கு  வந்து செல்லும் பொழுது பறவைகளின் ஒலி இசை போன்று ஒலிக்குமாம்

ஆதலால் நீர்வீழ்ச்சியில் பறவை களின் ஓசைகள் கவிதை போல் இருக்கும்.
ஆதலால் இவ்வருவிக்கு கவியருவி என மலைவாழ் மக்கள் அழைத்ததாக கூறப்படுகிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அருவி பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் குரங்கு அருவி என சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அழைத்தனர். இதையடுத்து குரங்கு அருவி எனவே வழக்கத்தில் பெயர் மாறிவிட்டது. இந்த குரங்கு அருவிக்கு உள்ளூர் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள்.

தற்போது ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மலைவாழ் மக்களை பாரம்பரியத்தை காப்பாற்றும் விதமாக வனத்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், குரங்கு அறிவிக்கும் அதன் பாரம்பரிய பயிரான கவியருவி என்று வனத்துறையினர் தற்போது பெயர் மாற்றம் செய்துள்ளனர் குரங்கு அருவி என பெயர் பலகையை மாற்றிவிட்டு கவியருவி எனவும் வைத்துள்ளனர். 

No comments