• Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms And Conditions
  • Disclaimer

Cheran Express
    • செய்திகள்
    • _பொது
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • உலகம்
    • வனம்
    • கட்டுரைகள்
  • Breaking News

    Home / பொது / பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்கவேண்டி தொழில் வர்த்தக சபையில் தீர்மானம்

    பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்கவேண்டி தொழில் வர்த்தக சபையில் தீர்மானம்

    Cheran Express January 29, 2021 பொது
    பொள்ளாச்சியை  தனி மாவட்டமாக்கவேண்டி தொழில் வர்த்தக சபையில் தீர்மானம்
     

    பொள்ளாச்சி, ஜன.29
     
     பொள்ளாச்சி தனிமாவட்டமாக மாற்றக்கோரி பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
     
     

    கடந்த 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பொள்ளாச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பொள்ளாச்சி கோவை மாவட்டத்தில் கோட்டமாக மாற்றப்பட்டது. அப்போதே சார் ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டு சார் ஆட்சியர் தலைமையில் நிர்வாகம் நடைபெற்று வந்தது. 
     
    அதற்குப் பிறகு பல்வேறு அரசியல் காரணங்களால் பொள்ளாச்சி மாவட்டமாக மாற்றப்படாமல் உள்ளது. பொள்ளாச்சி கோட்டத்தின் கீழ் வட்டமாக செயல்பட்டு வந்த திருப்பூர் தற்போது, மாவட்டமாக  மாற்றப்பட்டு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் 50 ஆண்டு கால கோரிக்கையாக இருந்தும் பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
     
     பொள்ளாச்சியைவிட சிறிய பகுதிகள் எல்லாம் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் காரணங்களுக்காக பொள்ளாச்சி மாவட்டம் ஆக்கப்படாமல் உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பொள்ளாச்சியை மாவட்டமாக மாற்ற கோரி தற்போது பொள்ளாச்சியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
     
     இந்நிலையில், பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை சார்பில் பொள்ளாச்சியை தனிமாவட்டமாக மாற்றக்கோரி வெள்ளிக்கிழமை தீர்மானம் நடைபெற்றது. 
     
    பொள்ளாச்சியை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தொழில் வர்த்தக சபைத்தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சபரி எஸ்.கண்ணன், பொருளாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
     
    தொழில் வர்த்தக சபை உறுப்பினர்கள், பல்வேறு சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். பொள்ளாச்சியை விட மக்கள்தொகையில், பரப்பளவில் குறைவாக உள்ள பகுதிகள் மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பொள்ளாச்சியை அரசு மாவட்டமாக மாற்றவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 
     
    மேலும், இந்த கோரிக்கையை முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர், சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆகியோரிடத்தில் தொழில் வர்த்தக சபை சார்பில்
    மனு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

    ---













     

    பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்கவேண்டி தொழில் வர்த்தக சபையில் தீர்மானம் பொள்ளாச்சியை  தனி மாவட்டமாக்கவேண்டி தொழில் வர்த்தக சபையில் தீர்மானம் Reviewed by Cheran Express on January 29, 2021 Rating: 5
    Share This
    Facebook Twitter
    பொது

    No comments

    Subscribe to: Post Comments ( Atom )

    Social Counter

    • facebook
      Followers
    • twitter
      Followers
    • youtube
      Followers
    • linkedin
      Followers

    Popular Posts

    • அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் சீனியர் சிட்டிசன்கள் போராட்டம்
      அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் சீனியர் சிட்டிசன்கள் போராட்டம்
    • இஸ்ரோவின் பதிவு செய்யப்பட்ட பயிற்சி மையமான பொள்ளாச்சி இன்ஸ்டிடியூட்
      இஸ்ரோவின் பதிவு செய்யப்பட்ட பயிற்சி மையமான பொள்ளாச்சி இன்ஸ்டிடியூட்
    • நகராட்சி நியமன உறுப்பினர் கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் முகாம்
      நகராட்சி நியமன உறுப்பினர் கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் முகாம்
    • ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம்
      ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம்
    • ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறாவளி காற்று
      ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறாவளி காற்று

    Subscribe Us

    Facebook

    Total Pageviews

    Adsense

    Categories

    Featured Posts

    Recent Posts

    Tags

    அதிர வைக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை (1) அரசியல் (61) ஆன்மீகம் (15) கட்டுரை (4) செய்தி (2) செய்திகள் (138) தேமுதிக வேட்பாளர் பட்டியல் (1) பொது (64) பொள்ளாச்சியை வென்றவர்கள் (1) வனம் (21) வாழ்த்து பெற்ற வேட்பாளர்கள் (1)
    //disable Text Selection and Copying //========================================================== //disable right click menu //============================================================== // disable viewing page source
  • Created By SoraTemplates | Distributed By Gooyaabi Templates