மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா நடக்குமா என பக்தர்கள் குழப்பம்
மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா நடக்குமா என பக்தர்கள் குழப்பம்
பொள்ளாச்சி, ஜன.27
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளதால் இந்த ஆண்டு குண்டம் விழா நடக்குமா என பக்தர்கள் குழப்பமடைந்துள்ளனர். _box-sec_AdSense1_1x1_as-->
கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன்
கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. மாசாணியம்மன் கோயிலுக்கு உள்ளூர்,
வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக
வந்துசெல்வார்கள். விஷேசநாட்கள், வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்துசெல்வார்கள்.
ஆனைமலை
மாசாணியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா விமர்சையாக
நடைபெறும். குண்டம் விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையில் கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்கம்.
குண்டம் விழா துவங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்பே குண்டம் விழா
குறித்த ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு குண்டம் விழா
குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி தை
அமாவாசை வரவுள்ளது. ஆனால், தற்போதுவரை குண்டம் விழா குறித்து அறிவிப்பு
வெளியாகவில்லை. இதனால், பக்தர்கள் குண்டம்விழா நடைபெறுமா, நடைபெறாத என
குழப்பத்தில் உள்ளனர். கரோனா காலம் என்பதால் குண்டம் விழா நடத்த மாவட்ட
நிர்வாகத்திடம் அனுமதி கோயில் நிர்வாகம் சார்பாக விண்ணப்பிக்கபட்டுள்ளது.
மாசாணியம்மன்
கோயில் நிர்வாகத்தினர்
கூறுகையில், கரோனா காலம் என்பதால் குண்டம் விழா நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பித்துளோம். மாவட்ட நிர்வாகம்தான் குண்டம் விழா குறித்து முடிவு செய்வார்கள் என்றனர்.
கூறுகையில், கரோனா காலம் என்பதால் குண்டம் விழா நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பித்துளோம். மாவட்ட நிர்வாகம்தான் குண்டம் விழா குறித்து முடிவு செய்வார்கள் என்றனர்.


No comments