Breaking News

கிணத்துக்கடவில் பாஜக இளைஞரணி ஆலோசனைக்கூட்டம்

 கிணத்துக்கடவில் பாஜக இளைஞரணி ஆலோசனைக்கூட்டம்


பொள்ளாச்சி, ஜன.7
 
 கிணத்துக்கடவில் வியாழக்கிழமை பாஜக இளைஞரணி ஆலோசனைக்கூட்டம் தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.
 
 

மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், பாஜக  தெற்கு மாவட்டத்தலைவர் வசந்தராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். 
 
மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் ராஜேஷ், மாநில இளைஞரணி செயலாளர்கள் கார்த்திக், ப்ரீத்தி லட்சுமி, கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் மோகன்ராஜா, கோவை வடக்கு மாவட்ட இளைஞரணித்தலைவர்  ஜெயபால், கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர்  மகேஷ், நீலகரி மாவட்ட இளைஞரணி  தலைவர் ரகுநந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 

 பாஜகவில் புதிய நிர்வாகிகள் சேர்ப்பது, வரும் பிப்ரவரி 6ம் தேதி சேலத்தில் நடக்கவிருக்கும் பாஜக இளைஞரணி மாநாட்டிற்கு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

No comments