செயின் பறிப்பு குற்றவாளிகள் நான்குபேர் கைது
பொள்ளாச்சியில் செயின்பறிப்பு, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நான்குபேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி,டிச.14
பொள்ளாச்சி காவல் உட்கோட்ட பகுதிகளில் செயின்பறிப்பு, இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை திருடியவழக்கில் அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பிரபுதாஸ் உட்பட 10க்கும் அதிகமானோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், பொள்ளாச்சி -வால்பாறை சாலையில் தனிப்படையினர் திங்கள்கிழமை வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த சூர்யஜெகதீஸ்(27), கோட்டூரை சேர்ந்த ரகுபதி(34), மல்லீஸ்வரன்(31), பொங்காளியூரை சேர்ந்த சபரிநாதன்(24) ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை நடத்தியதில், கைது செய்யப்பட்டவர்கள் பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் செயின் பறிப்பு, இருசக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பணம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம், 13 பவுன் நகை, இருசக்கர வாகனங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

No comments