Breaking News

மாசாணி அம்மன் கோயிலில் அம்மாவாசை தரிசனம்

 

மாசாணியம்மன் கோயிலில் அமாவாசை தரிசனம்

பொள்ளாச்சி, டிச.14
 ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் திங்கள்கிழமை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் தரிசனத்திற்கு அதிக அளவில் வந்துசெல்வார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் அமாவாசை போன்ற விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். கோயில் காலை 6 மணி நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். திங்கள்கிழமை அமாவாசையை முன்னிட்டு காலை முதலை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர்.

No comments