Breaking News

விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக திமுக இருக்கும் - கனிமொழி எம் பி பேச்சு

 




பொள்ளாச்சி. டிச. 9.

பொள்ளாச்சி அடுத்த பூச்சனாரி மில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழியிடம்  விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

 பிஏபி திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் சார்பில் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஏபி திட்டத்தில் 8 டி எம் சி வரை தண்ணீர் கிடைப்பதில்லை என்றும் ஆகவே கேரளத்துடன் பேச்சு நடத்தி தமிழகத்திற்கான நீர் இழப்பை சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
 நீர்ப்பாசன துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டுமென்றும் பால் விலைமாற்றத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், திமுக ஆட்சி அமைந்தவுடன் அதை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

 தொடர்ந்து பல விவசாயிகள் விவசாயம் சார்ந்து கோரிக்கை வைத்தனர்.

 இதற்கு கனிமொழி  எம் சி பதில் அளித்து பேசியதாவது...,
விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் கட்சி திமுக தான். திமுக ஆட்சி காலத்தில் தான் இலவச மின்சாரம் கொண்டு வரப்பட்டது. விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

 இப்படி விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது திமுக தான். விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட இலவச மின்சாரத் திட்டத்தை இன்று அதிமுக கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின் திட்டத்தால் இலவச மின்சாரமே கேள்விக்குறியாகும் நிலையே உள்ளது. இப்படிப்பட்ட திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. இதுதவிர மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று வேளாண் திட்டங்கள் விவசாயிகளின் எதிர்காலத்தை பாதிக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகளின் எதிர்காலம் அடகு வைக்கப்படும். இப்படி விவசாயிகளின் எதிர்காலத்தை பாதிக்கும் திட்டத்திற்கு இந்தியாவில் பாஜக முதல்வர்கள் அல்லாமல் மாற்று கட்சியை சார்ந்த ஒரு முதல்வர் ஆதரவு அளித்துள்ளார்
. அவர்தன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 

பிஏபி திட்டத்தில் தமிழகத்திற்கு 8 டிஎம்சி இழப்பு இருக்கிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் கேரளத்துடன் பேச்சு நடத்தி தமிழகத்திற்கான நீர் இழப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பால் விலை பிரச்சனை சரி செய்யப்படும். குறிப்பாக திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் தற்போது சரியாக செயல்படுவதில்லை. இந்த சுய உதவிக் குழுக்கள் திமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

 சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு திமுக ஆட்சியில் முக்கியத்துவம் வழங்கப்படும். தற்போது அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் ஆட்சியாளர்களின் சுயலாபத்திற்காக கொண்டுவரப்படுகிறது. இந்த திட்டங்களால் மக்கள் பயன் அடைவதைவிட அமைச்சர்கள் அதிகம் பயனடைகின்றனர். இன்னும் ஐந்து மாதங்களில் தமிழகத்திற்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடுதலை கிடைக்கும். திமுக ஆட்சி அமைக்கும என்றார். நிகழ்ச்சியில், திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், எம்பி சண்முகசுந்தரம், மாநில விவசாய அணி நிர்வாகி தமிழ்மணி, ஒன்றிய செயலாளர்கள் யுவராஜ், தேவசேனாதிபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments